Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • இன்ப நிலா

    மல்லிகைச் சரத்தை மணங்கமழ கூந்தலில் சூடிக் கொள்ளச் சென்ற தாரா, 'சட்'டென்று நினைவு வந்தவளாக கூந்தலை நோக்கிப் போன கையைப் பின்னே இழுத்துக் கொண்டாள்.அவள் இன்று எப்படி மறந்து போனாள்.தாராவின் உள்ளம் மகிழ்ச்சியால் புள்ளிமான் குட்டி போல துள்ளிக்கொண்டு இருந்தது. அவள் இன்று வேலைக்குப் போகிறாள். அந்த மகிழ்ச்சியில் மறந்து விட்டாளோ?மல்லிகைச் சரத்தை நீளமாக இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு, அதன் நாரை தரையில் உரச ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • அல்லி…

    அந்த அறை முழுவதும் நறுமணம் கமழ்ந்து கொண்டு இருந்தது.பட்டு இதழாக மொட்டு விரிந்த முல்லையும் மல்லிகையும் கமகமத்தன.சந்தன ஊதுபத்தி சாம்பல் ஆகிக் கொண்டு இருந்தது.ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மணம் வீசின. ஒரு தட்டில் லட்டு, அல்வா, ஜாங்கிரி என்று அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுத்தமான நெய்யில் செய்யப்பட்ட அவையும் சுத்தமான மணத்தை வீசின.பூத் தூவிய மஞ்சத்தில் புத்தாடையுடன் அமர்ந்து இருந்த மதியழகன், சென ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாலையிட்ட மங்கை…

    அழகிய அந்தப் பங்களா சினிமா அதிபர் சிங்காரத்துக்கு உரியது.ஆனால், அதன் உள்ளே இருந்து அன்ன நடை பயின்று வெளியே வந்த அந்த ஓவியப் பூங்கொடி உடல் மாலாவுக்கு உரியது.அவள் முகத்தில் மலர்ச்சி இல்லை; நெகிழ்ச்சி இல்லை. சற்று வாடியிருந்தது - ஏமாற்ற ரேகை ஓடி இருந்தது.வெளியில் அவளது கார் தயாராக நின்றது.காரைப் பிடித்துக் கொண்டு மாலாவும் ஒரு கணம் நின்றாள்.அவள் முகத்திலே ஒரு புன்னகை.அதைப் புன்னகை என்று சொல்வதா?புன்னக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மலரும்... வண்டும்...

    "அம்மா நான் அலுவலகத்துக்குக் கிளம்புகிறேன்."காந்தச் சிலை போலிருந்த கட்டழகு மலர் அம்மாவிடம் சொல்லிக் கொண்டாள்.அவள் சாதாரணக் கைத்தறி சேலை கட்டியிருந்தாள். சேலையிலும் பெண்கள் சோலை மலர் போல எழிலாகத் தோன்ற முடியும் என்பதற்கு அவள் எடுத்துக் காட்டாக இருந்தாள்.அவள் கையிலிருந்த அலுவலகப் பெட்டியை வேலைக்காரி வாங்கிக் கொண்டு போனாள்."நல்லபடி போய் விட்டு வாம்மா" என்று தங்கம் மகளை வழி அனுப்பினாள்.மலர் நடந்தாள். ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இலட்சியப் பெண்..!

    விழிமலருக்கு அதற்கு மேலும் பொறுமையில்லை. டெலிபோனை கையில் எடுத்து விட்டாள். எண்களை சுழற்றினாள்.ஒன்று...ஏழு.... ஒன்று."அலோ....'ஏஜி' வரிசையில் முதல் பரிசு யாருக்கு?""மன்னிக்க வேண்டும். அந்த வரிசை இன்னும் குலுக்கப்படவில்லை."விழிமலர் எவ்வளவு ஆவலோடு கேட்டாள்? சே... பெருத்த ஏமாற்றம். அந்த ஏமாற்றத்தை வெளிக்காட்டிக் கொள்கிறவள் போல 'டக்' என்று போனை வைத்தாள்.சோபாவிலே உட்கார்ந்து இருந்த சொக்கலிங்கம் 'கலகல' வ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • இரு உள்ளங்கள்…

    அலைபாய்ந்து கொண்டு இருந்த கடல், அவர்களைக் காணாமல் அலைமோதிக் கொண்டு இருந்தது!புற்றீசல் போல, ஓயாமல் புரண்டு புரண்டு வந்த அலைகள் கரையிலே மோதியது, அவர்கள் வந்து விட்டார்களா என்று கரைவரை பார்த்துவிட்டுப் போவது போல இருந்தது.பந்தயக் குதிரைகள் பாய்ந்து ஓடுவது போல, அலைகள் அப்பாலும் - கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்களைத் தேடுகிறது போலும்!வேலை முடிந்த கணவன் பொழுதோடு வீடு திரும்பா விட்டால், மனைவியின் மனம் எப ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • குழந்தை

    விட்டெறிந்த கல் போல விர்ரென்று மேல் எழுப்பிக் கிளம்பியது விமானம்!உழைப்பவன் உயர முடியும் என்ற உண்மையை உறுதிப்படுத்துவது போல இருந்தது, அதன் ஓட்டம்.மற்ற வண்டி வாகனங்களைப் போல இந்த விமானத்தின் ஓட்டமும் முதலில் தரையில்தான் தொடங்கியது. ஓடி ஓடி, காற்றைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து செல்லும் அம்பு போல, மேலே சென்று, நீலக் கட்டிலில் நீந்தும் மாபெரும் கப்பல் போல, கோலவானில் விமானம் மிதக்கத் தொடங்கியது.கிளம்பிய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாமியார்

    அங்கமுத்து அலங்காரத்தை முடித்துக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கு மேலாகி விட்டது!ஆனால், நாலுமணிக்கே வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்று அவள் சொல்லி அனுப்பியவர்களில் ஒருவர் கூட இன்னும் வரவில்லை."கிளிப்பிள்ளைக்குப் போல சொல்லி அனுப்பினேனே" என்று, கிளிப்பிள்ளை போல, அங்கமுத்து சொல்லிக் கொண்டே இருந்தாள்.ஓர் இடத்தில் உட்கார முடியவில்லை; அப்படியும் இப்படியும் நடந்து கொண்டு இருந்தாள். வாசலைப் பார்த்துப் பார்த்து ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • அடிக்கிற கைதான் அணைக்கும்..!

    அலைபேசியில் வரிசையாகப் பேசிக் கொண்டிருந்தாள், அன்புக் கொடி.அனைவரும் அவளுடைய அன்புத் தோழிகள். பல தோழிகளிடம் அவள் பேசினாலும் விசயம் ஒன்று தான்."வெயில் மண்டையைப் பிளக்கிறதடி! 107 - 108 கொளுத்துகிறதாமே?""அதுதான் வெளியில் எங்கேயும் போவதில்லை. ஏ.சி. ரூமில் அடைந்து கிடக்கிறேன்.""அடைக்கோழி போல எத்தனை நாளைக்கடி அறைக்குள் அடைந்து கிடக்க முடியும்?""வேறு என்னடி செய்வது? வெயில் வெளியில் தலை காட்ட முடியவில்லையே ... Leer más

    $3.50 USD o gratis con Kobo Plus

  • ஒரு கொடியில் இரு மலர்கள்

    அழகான ஏழைப் பெண்ணைப் போல அந்தக் குடிசை விளங்கியது.எழில் இருந்தது; அதே நேரத்தில் எளிமையும் இருந்தது. அழகு இருந்தது; அடக்கமும் இருந்தது. தென்னங்கீற்று வேய்ந்த சாதாரணக் குடிசை, அது. "காணி நிலம் வேண்டும்!" என்று காளி தேவியிடம் கை கூப்பிய கவிஞர் பாரதியார், "அந்தக் காணி நிலத்திடையே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும்!" என்று வேண்டினாரே, அந்த மாளிகையைப் போன்று இந்தக் குடிசை திகழ்ந்தது.குடிசையின் முன்புறம் மல்ல ... Leer más

    $3.99 USD o gratis con Kobo Plus

  • பத்தினிக் கோட்டம்

    முத்து, இன்றைக்காவது எங்கள் வீட்டிற்கு வாயேன்!""இன்றைக்கு நேரமாகி விட்டது. அதோ பார், சோமு, ராமு, கோபு, வாணி எல்லாரும் வீட்டுக்குப் போகிறார்கள். நானும் போக வேண்டும். அம்மாவிடம் சொல்லிவிட்டு, நாளை உன் வீட்டுக்கு வருகிறேன்.""இல்லாவிட்டால், உன் அம்மா அடிப்பார்களா?""ஊ...கூம்! எங்கள் அம்மா ரொம்ப நல்லவங்க. என்னை அடிக்கவே மாட்டாங்க.""பிறகு ஏன் பயப்படுகிறாய்? வாயேன், எங்கள் வீட்டுக்கு. உன்னைப் பார்க்க வேண ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • ஆனந்த பூங்காற்றே..!

    மலர்கள் பறப்பது இல்லை. வண்டுகளே மலர்களைத் தேடிப் பறந்து வரும்.மலர்கள் வண்டுகளைத் தேடிப் போவது இல்லை. செடி கொடிகளில் பூத்துக் குலுங்கிக்கொண்டு இருக்கும். வண்டுகள் தான் மலர்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சிறகடித்து வரும்.இதுதான் இயற்கை. இதுதான் இயற்கையின் நியதி. ஆனால், அந்த இயற்கைக்கு மாறுபட்ட காட்சியை அங்கே காண முடியும்!திருவரங்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை சொர்க்க வாசல் திறக்கப்படுவது போலவோ, கும்பகோணத ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus